காங். மூத்த தலைவர் என்.டி.திவாரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ராஜ்நாத் சிங்!
லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி.திவாரியை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் திடீரென நேரில் சந்தித்துப் பேசியதுடன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள என்.டி. திவாரி வீட்டிற்கு இன்று ராஜ்நாத்சிங் திடீரென சென்று சந்தித்துப் பேசினார். அப்போது என்.டி. திவாரியின் காலைத் தொட்டு வணங்கினார் ராஜ்நாத்சிங். இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தல் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

ராஜ்நாத்துக்கு ஆதரவு- திவாரி
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங், முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் நான் எம்.எல்.ஏ.ஆனது முதல் தற்போது வரை என்.டி. திவாரியுடன் நட்புடன் இருக்கிறேன் என்றார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய என்.டி.திவாரி, எனது ஆதரவு ராஜ்நாத்சிங்குக்கு உண்டு என்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி.திவாரி, மூன்று முறை உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், ஒரு முறை உத்தரகாண்ட் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
ராஜிவ்காந்தி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகவும், ஆந்திர ஆளுநராகவும் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அத்துடன் என்.டி.திவாரிக்கு இப்போதும் லக்னோவில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
தற்போது லக்னோவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராஜ்நாத்சிங், என்.டி.திவாரியின் ஆதரவாளர்களை கவரும் வகையிலே திவாரியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications