2018-ஐ காங்கிரஸ் 'பயங்கரமாக' அடித்து ஆடப் போகிறது.. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை!
ராய்ப்பூர்: 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தலில் மிக அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 20 தொகுதிளுக்கு நவம்பர் 7-ந் தேதியும் எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2018-ம் ஆண்டு சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களிலும் பாஜக வெறும் 15 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். அதேநேரத்தில் பாஜக முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி இருந்தன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500 விலைக்கு விற்பனை; 17.5 லட்சம் பேருக்கு இலவச வீடு; எல்கேஜி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி; ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியது. பாஜக, பீடி இலை சேகரிப்போருக்கு கூடுதல் போனஸ், ரூ10 லட்சம் இலவச காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தது.
இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகல் கூறியதாவது: சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். 2018 தேர்தலைவிட மிக அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி பெற்று பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் வலிமையான ஆட்சியை அமைக்கும் என்றார்.
இதனிடையே தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சிதான் அமையப் போகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.
-
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications