திரும்புகிறதா 1989?: 3வது அணி ஆட்சி அமைக்க ஆதரவு தர தயாராகும் காங்கிரஸ்?
டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதைத் தடுக்க மூன்றாவது அணி அல்லது மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன. இம்முடிவுகள் பா.ஜனதா கூட்டணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மோடி தலைமையில் யார் யார் அமைச்சர் ஆவார்கள் என்று யூகங்களும் வெளியாகத் தொடங்கிவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த கருத்துக் கணிப்பை ஏற்கவில்லை.

கருத்து கணிப்பு பலிக்காது- காங்.
கடந்த சில தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பலிக்கவில்லை. முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கிறது. எனவே, மாநில கட்சிகள்தான் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும் கூறிவருகின்றனர்.

பாஜகவுக்கு 282, காங்கிரஸ் அணிக்கு 102
பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிகபட்சமாக 282 இடங்கள் கிடைக்கலாம் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகமாக 102 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது.

மாநில கட்சிகளுக்கு 199
அதே நேரத்தில் மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க., இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்றவைக்கு அதிகபட்சமாக 199 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் ப்ளஸ் மாநிலக் கட்சிகள்
காங்கிரசும் மாநிலக் கட்சிகளும் இணைந்தால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 301. தேர்தல் முடிவுகள் மாநில கட்சிகளுக்கு சாதகமாக இருந்தால் பாரதிய ஜனதா பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாத நிலை ஏற்படும்.

3 வது அணி ஆட்சி?
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மூன்றாவது அணி மற்றும் மாநில கட்சிகள் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கலாம். காங்கிரஸ் ஓரளவு இடம் பிடித்தால் மத சார்பற்ற ஆட்சி அமைய மாநில கட்சிகள் ஆதரவு கொடுக்க முன்வரலாம்.

காங்கிரஸ் ஆட்சி?
இது போன்ற சூழ்நிலை அமைந்தால் மாநில கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி கட்சி மீண்டும் அமையவும் வாய்ப்பு உள்ளது என்பது அரசியல் பாரையாளர்களின் கருத்து.

காங்கிரஸ் ஆதரவுடன் அரசு?
காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்பாவிட்டால் மாநில கட்சிகளில் அதிக இடம் பிடிக்கும் கட்சி புதிய ஆட்சிக்கு தலைமை வகிக்கலாம் என்றும், காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதற்கு முன்னுதாரணங்களும் சுட்டிக்காட்டப்படுகிறது.

1989ல் காங்கிரஸுக்கு எதிராக வி.பி.சிங்
1989ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ்(எஸ்) அனைத்து கட்சிகளையும் இணைத்து "ஜனதா தளம்" என்ற கட்சியை வி.பி.சிங். உருவாக்கினார். அப்போது காங்கிரஸை வீழ்த்த இந்த ஜனதா தளம், இடதுசாரிகள் ஆகியவற்றின் தேசிய முன்னணியில் திமுக, தெலுங்குதேசம், அசாம் கனபரிஷத் ஆகிய மாநில கட்சிகளும் இடம்பெற்றன. தேர்தலில் தேசிய முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. தேசிய முன்னணி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது.

வி.பி.சிங்குக்கு பதிலாக சந்திரசேகர்
ஆனால் மண்டல் கமிஷன் மற்றும் ராமர்கோயில் விவகாரங்களில் வி.பி.சிங். அரசை பாஜக கவிழ்த்தது. அப்போது வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்தில் இருந்து விலகி சந்திரசேகர் , சமாஜ்வாடி ஜனதா கட்சியை உருவாக்கினார். அவருக்கு 64 எம்.பிக்கள் ஆதரவளித்தனர். அந்த 64 எம்.பிக்களுடன் சந்திரசேகர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜிவ்காந்தி முன்வந்தார். அந்த அரசு சில மாதங்கள் ஆட்சியில் இருந்தது. பின்னர் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்ள 1991 பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1990ம் ஆண்டு போல..
தற்போதும் காங்கிரஸ் குறைவான இடங்களைப் பெற்று மாநிலக் கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றினால் 1990ம் ஆண்டு ராஜிவ் காந்தி செய்தது போல மாநிலக் கட்சிகள் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தரவும் வாய்ப்பிருக்கிறது.

மாநிலக் கட்சிகள் நிலை..
அதிமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸை பரம வைரியாகப் பார்க்கிறது. பிஜூ ஜனதா தளத்துக்கோ மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பாஜகவின் தயவு தேவையாக இருக்கிறது. வங்கதேசத்தவர் குடியேற்ற பிரச்சனையில் திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் மிகக் கடுமையாக மோதிக் கொண்டன. ஆனால் காங்கிரஸுடன் திரிணாமுல் நெருக்கமாக இருக்கிறது.

எதிர்கட்சியாவோம் - ராகுல்
அதே நேரத்தில் 'எதிர்க்கட்சி' வரிசையில் அமர்ந்துதான் பார்ப்போம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவை தடுக்க காங். ஆதரவுடன் அரசு
மத்தியில் பாஜக ஆட்சி வந்தால் காங்கிரஸை ஒழித்துவிடுவார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இதனால் அதிமுக, திரிணாமுல், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.
-
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications