காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் 50 டிஎம்சி நீர் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர். இன்றைய விசாரணையின் போது கர்நாடகா தரப்பு, அணைகளில் போதுமான நீர் இல்லை என வாதிட்டது.

ஆனால் இதை தமிழக அரசு தரப்பு நிராகரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேற்பார்வை குழுவை தமிழகமும் கர்நாடகாவும் எதிர்க்கின்றன. ஆகையால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியம்தான் இறுதித் தீர்வு.
இந்த மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஏன் உடனே அமைக்கவில்லை; காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைப்பதுதான் தீர்வாகும் என்று கூறினர்.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் நாளை முதல் செப். 27-ந் தேதி வரை 6,000 கன அடிநீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகாவின் அணைகளை அந்த வாரியம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்; தமிழகத்துக்கான 192 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில் சிக்கல் இருக்காது; ஆகையால் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications