மதமாற்றம் செய்வதுதான் அன்னை தெரசாவின் முக்கிய நோக்கம்! - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
அல்வார்: அன்னை தெரசாவின் பிரதான நோக்கம் மதமாற்றம் செய்வதுதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
தன்னலமற்ற புனிதர் என்று போற்றப்படும் அன்னை தெரசா பற்றி இப்படி ஒரு கருத்தை முன்வைத்திருப்பது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் கிராமத்தில் தொண்டு நிறுவன விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதன் செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது, "தன்னலமற்ற நோக்கத்துடன் கொண்ட ஒரு செயலை செய்வது நல்லது. ஆனால் அன்னை தெரசாவின் செயல்பாடு, சேவை என்ற பெயரில் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதைத்தான் அவர் செய்தார். அவரைப் பின்பற்றி பபல நிறுவனங்களும் மதமாற்றம் செய்தன. அதனால்தான் தெரசா மதிப்பிழந்து போனார்," என்றார்.
அவருடன் விழாவில் கலந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் சிங், "அன்னை தெரசாவை விட நிறைய தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை புரிந்தன. ஆனால் கிறிஸ்துவ அமைப்புகள், ஊடகங்கள்தான் அவரை பிரபலமாக்கி விட்டன," என்றார்.
கடந்த சில மாதங்களாகவே மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்ந்த சிலர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவை பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகின்றன.
இதையடுத்து கிறிஸ்துவ தேசிய விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘‘இந்தியாவில் மத நம்பிக்கைகள் போற்றப்படும். எனது அரசு அனைத்து மதங்களையும் சம மதிப்புடன் நடத்தும். மத வெறுப்பைத் தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதையும் மீறி, உலகமே போற்றும், மனிதாபிமானத்தின் அடையாளமாகக் கருதப்படும் அன்னை தெரசா பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோசமாக கருத்துத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications