மாஜி மத்திய அமைச்சர் வீட்டுக்குள் நடந்த கொலையில் குற்றவாளியை 'காட்டி கொடுத்த' காயம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா வீட்டில் வேலைக்கார பெண்மணியின் கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக செல்ஜா வீட்டு சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவின் வீடு டெல்லி சுனேரிபாக் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கொலையான நபர், குமாரி செல்ஜாவின் வீட்டு வேலைக்கார பெண்மணியின் கணவன் சஞ்சய் (42) என்று தெரியவந்தது.

செல்ஜாவின் வீட்டு வளாகத்திலேயே வேலைக்காரர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. இங்குதான் சஞ்சய் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இந்நிலையில், சஞ்சய் தலையில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார். இரும்பு கம்பியால் தலையில் அடித்து அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், செல்ஜாவின் சமையல்காரர் அனில் யாதவ் (35) என்பவர்தான் கொலைகாரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடியிருப்பை காலி செய்வது தொடர்பாக அனிலுக்கும், சஞ்சய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறுதான் கொலைக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அனில்யாதவ் கொலையாளி என்பதை அவரது முகத்தில் இருந்த காயம்தான் காட்டிக்கொடுத்துள்ளது. அதாவது, சஞ்சய்யை கொலை செய்ய அனில் முயன்றபோது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அனிலின் முகத்தில் சஞ்சய் கைநகங்கள் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்ற போலீசாரின் கேள்விக்கு அனில் திரு,திருவென முழித்துள்ளார். தக்க வகையில் போலீசார் விசாரணை நடத்தியதும் உண்மை வெளியேவந்துள்ளது.
கொலை நடந்தபோது அனில் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை இருப்பதையும் போலீசார் வழக்கில் ஆதாரமாக சேர்த்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் வீட்டுக்குள் கொலை நடந்திருப்பதும், கொலையாளி, அவரின் சமையல்காரராகவே இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications