அமித்ஷாவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த 2 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் வன்முறையைத் தூண்டும் வகையில் அமித்ஷா பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமித்ஷா மீது அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இக்குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் நீதிமன்றம் ஏற்காமல் திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில் அமித்ஷா மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீஸ் துணை கண்காணிப்பாளர் யோகேந்தர் சிங், சப் இன்ஸ்பெக்டர் பாரத் லால் ஆகியோர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் பாரத் லால் இந்த வழக்கை விசாரித்தார், யோகேந்திர சிங் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அம்மாநில காவல்துறை உயர் அதிகாரி ஹெச்.என். சிங் கூறுகையில், இது வழக்கமான இடமாற்றம் தான், அமித்ஷா வழக்குடன் தொடர்பு கிடையாது. என்றார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications