கொரோனா: இந்தியாவில் பலி- 3; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆகவும் அதிகரித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் 140 நாடுகளை ஆட்டுவித்து வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை சுமார் 1.60 லட்சம் பேர் கொரானாவினால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை சுமார் 6,500. இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் நேற்று பலியாகினர். இந்த நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1800. ஸ்பெயினில் 97 பேரும் பிரான்ஸில் 29 பேரும் நேற்று ஒரே நாளில் மரணித்துள்ளனர். இங்கிலாந்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இக்கொரோனாவின் தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலும் கிடைத்த தகவல்களின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மாலை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114ஆகத்தான் இருந்தது. அதன் பின்னர் அதிகரித்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏற்கனவே நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications