காங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள்: மோடி தாக்கு
தாவணகரே: காங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள் என்று கர்நாடக மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகரேவில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

இரட்டை சகோதரிகள்
காங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள். ஊழல் காங்கிரஸின் கருவில் இருந்து தான் பிறக்கிறது. காங்கிரஸ் ஜென்டில்மேனிடம் இருந்து ஒரு விவரத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் எத்தனை அமைச்சர்கள் சிறையில் உள்ளார்கள், எதற்காக உள்ளார்கள் என்பது தெரிய வேண்டும்.

பெப்பர் ஸ்ப்ரே
காங்கிரஸ் வழக்கமாக மக்கள் கண்ணில் அழுக்கை தூவும். ஆனால் தற்போது அது மிளகாய்ப்பொடியை தூவி உள்ளது.(லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. லகடபாதி ராஜகோபால் தெலுங்கானா மசோதாவை எதிர்த்து பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

போலி காந்திகள்
மகாத்மா காந்தி உயிருடன் இருக்கையில் காங்கிரஸ் கட்சி வேதாந்தமாக இருந்தது. ஆனால் எப்பொழுது போலி காந்திகள் வந்தார்களோ அதில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றம் பற்றி கவலைப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் உண்மையாகவே பெண்களை பற்றி கவலைப்படுவதாக இருந்தால் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் அவர்கள் நிம்மதியாக தூங்கவாவது செய்வார்கள் என்றார்.

எதியூரப்பா
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை மோடி புகழ்ந்து பேசினார். அவர் எப்பொழுதெல்லாம் எதியூரப்பாவின் பெயரை உச்சரித்தாரோ அப்பொழுதெல்லாம் அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே











Click it and Unblock the Notifications