பீம் ஆப், ரூபே கார்டு பண பரிமாற்றத்திற்கு 20% கேஷ்பேக்! ஜிஎஸ்டி கவுன்சில் அசத்தல் முடிவு!
டெல்லி: பீம் ஆப் மற்றும் ரூபே கார்டுகள் மூலம் செய்யப்படும் வர்த்தக பரிமாற்றத்திற்கு ஊக்கம் அளிப்பதற்கு மாநில அரசுகள் வெள்ளோட்ட அடிப்படையில் கேஷ்பேக் வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று 29ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோயல் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இதில், பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது சிறு தொழில்கள், மற்றும் வணிகர்கள் பிரச்சினை குறித்து அதிகமாக ஆலோசனை செய்யப்பட்டது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி சிறு தொழிலதிபர்களுக்கும், சிறு தொழில்துறைக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பியூஸ் கோயல், பீம் ஆப் மற்றும் ரூபே கார்டு மூலமாக வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக பணத்தை செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி வரி மதிப்பில் 20 சதவிகிதத்தைக் கேஷ் பேக் ஆக திருப்பி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.
அதிகபட்சமாக ஒரு பரிமாற்றத்திற்கு நூறு ரூபாய் கேஷ் பேக் திரும்ப அளிக்கலாம். இதை மாநில அரசுகள் வெள்ளோட்ட, அடிப்படையில் செய்ய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 28 29ம் தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications