For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது ராணுவ புரட்சிக்கு திட்டமிட்டேனா?: மறுக்கும் வி.கே.சிங்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் ராணுவ புரட்சிக்கு தாம் திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் நிராகரித்திருக்கிறார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வி.கே. சிங் அளித்த பேட்டியில், எனது வயது வரம்பு பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்ததன் காரணமாக ராணுவப் புரட்சி நடத்த டெல்லியை நோக்கி இரண்டு படைகளை நகர்த்தினேன் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டன.

Coup report was a farce to damage my credibility, says VK Singh

இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. நான் ராணுவ புரட்சிக்கு திட்டமிட்டதாக கூறுவது அபாண்ட பழி. ராணுவத்தில் ரகசியப் புலனாய்வுப் பிரிவை நடத்தினேன் என்பதும் தவறான குற்றச்சாட்டு. இதுபோன்று குற்றம் சுமத்துவது இன்னமும் நீடிக்கிறது.

இதற்கு பிரதமர் அலுவலகத்தில் உள்ள சண்டீகரைச் சேர்ந்த மூத்த அதிகாரியும், மூத்த பத்திரிகையாளர்கள் இருவருமே காரணம் என்றார்.

English summary
No coup can take place in India, asserted former Army chief Gen V K Singh, who faced allegations of planning a military takeover last year when he was locked in a major row with the government over his age issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X