‛‛கதறிய கள்ளக்காதல் ஜோடி''.. நடுரோட்டில் படுக்க வைத்து தாக்கிய நபர்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி வைத்து தாக்குவதும், அதனை யாரும் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அதாவது சாலையில் ஆண், பெண் என இருவர் அமர்ந்துள்ளனர். அவர்களை சுற்றி ஏராளமான பொதுமக்கள் நிற்கின்றனர். இந்த வேளையில் ஒருவர் இருவர் மீதும் மூங்கில் வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்.

முதலில் பெண் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மூங்கில் குச்சியால்அந்த நபர் பெண்ணை ஈவு ஈரக்கமின்றி கொடூரமாக தாக்குகிறார். வலி தாங்க முடியாத அந்த பெண் சாலையில் உருண்டு அலறி துடிக்கிறார். அதேபோல் சாலையில் அமர்ந்திருந்த ஆண் மீதும் அந்த நபர் மூங்கில் குச்சியால் தாக்குகிறார். அவரும் வலி தாங்க முடியாமல் துடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த சம்பவம் எங்கு நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது தான் அது மேற்கு வங்க மாநிலத்தில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ரா எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கள்ளக்காதல் ஜோடி மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த ஜோடி மீது தாக்குதல் நடத்தும் நபரின் பெயர் தஜிமுல் என்ற ஜேசிபி என்பதும், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்த வீடியோவை காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களின் எக்ஸ் வலைதளங்களில் பகிர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்க்குலைந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் இதுபோன்ற வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது. சந்தேஷ்காலி சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்று தொடர்ந்து நடக்கிறது என குற்றம்சாட்டி உள்ளன.
இந்த வீடியோ வைரலான நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். வீடியோவில் உள்ளவர்களின் அடையாளங்களை வைத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை்கு பிறகு தான் இந்த சம்பவம் குறித்த முழுவிபரம் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications