மணமகனுக்கு கொரோனா.. வார்டில் திருமணம்.. பட்டு புடவை, நகைகளுக்கு பதில் மணமகள் அணிந்த ஆடையால் நெகிழ்வு
ஆலப்புழா: கேரளாவில் தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து மணமகன் கையால் மணமகள் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரத் மோன் மற்றும் அபிராமி. இவர்கள் கைனாகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சரத் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அபிராமிக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

படுபிஸி
இந்த நிலையில் கல்யாண வேலைகளில் படுபிஸியாக இருந்த சரத்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய தாய் ஜீஜீமோலுக்கும் கொரோனா உறுதியானது. இந்த நிலையில் இருவரும் ஆலப்புழாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருமணம்
எனினும் மணமக்களுக்கு திட்டமிட்டபடி திருமணம் செய்ய முடியாத நிலையால் மனம் கலங்கினார். ஆனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் தேதி திருமணத்தை எப்படியாவது நடத்தி முடித்திட விரும்பினர். இதற்காக மாவட்ட ஆட்சியரை மணமகள் வீட்டார் சந்தித்தனர்.

கொரோனா வார்டு
திட்டமிட்டபடி கொரோனா வார்டில் தங்கள் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர். இதையடுத்து உரிய அனுமதியுடன் கொரோனா வார்டுக்கு மணமகள் நேற்றைய தினம் வந்திருந்தார். அவருடன் சில முக்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

திருமணம்
அனைவரும் கொரோனா பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருந்தனர். பின்னர் மாலைகளை மாற்றிக் கொள்ளுமாறு மணமகனின் தாயார் இருவரிடமும் கொடுத்தார். இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இது போன்ற ஒரு திருமணத்தை யாருமே எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications