கொரோனா கால கல்யாணம்.. பிபிஇ உடையுடன் அக்னியை வலம் வந்து திருமணம் செய்த மணமக்கள்
கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொள்வது கஷ்டமான விசயம்தான். பட்டுப்புடவை இன்றி ஷெர்வானி உடை அணியாமல் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிந்து திருமணம் செய்த மண மக்கள் அக்னியை வலம் வந்தனர்.
போபால்: பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து மாலை சூடி அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர் இந்த கொரோனா தம்பதியர். இந்த திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களும் பிபிஇ உடை அணிந்து பங்கேற்றதுதான் சுவாரஸ்யம். மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்த திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று மண மக்கள் கனவு கண்டு இருப்பார்கள். என்ன கலரில் புடவை எடுப்பது என்பது தொடங்கி பூக்கள், மாலைகள் கூட பல வித டிசைன்களின் ஆர்டர் கொடுத்திருப்பார்கள்.
திருமண நாளில் எடுக்கும் புகைப்படங்களை ஆல்பமாக போட்டு அதை காலம் காலமாக பார்த்து ரசிப்பார்கள். சிலரது திருமணம் கால காலத்திற்கும் சொல்லும் படியாக அமைந்து விடுகிறது. கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதால் கோவில் வாசலில் தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர்.

மத்திய பிரதேச மணமகனுக்கு கொரோனா
மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரத்தில் ஒரு ஜோடிக்கு ஏப்ரல் 25ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மணமகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 19ஆம் தேதி முதல் மணமகன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

பிபிஇ உடையில் திருமணம்
திருமணத்தை வேறொரு நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று உறவினர்கள் தெரிவித்தாலும் மணமக்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இருவரும். பாரம்பரிய திருமண உடைகளுக்கு பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்தனர். வேத மந்திரங்கள் முழங்க மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார் மணமகன்.

வலம் வந்த மணமக்கள்
திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்களும் பிபிஇ உடை அணிந்திருந்தனர். போட்டோகிராபரும் முழு கவச உடை அணிந்திருந்தார். கைகளை கோர்க்காமல் மணமகளின் மேலே கையை வைத்துக்கொண்டு அக்னியை வலம் வந்தார். உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காலத்திற்கும் மறக்க முடியாது
இந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண வீடியோ, போட்டோ ஆல்பங்களை காலத்திற்கும் பார்த்து கதை கதையாக பேசுவார்கள். கொரோனா காலத்தில் நடந்த திருமணங்கள் பல சுவாரஸ்ய கதைகளை தாங்கியுள்ளன. கேரளாவிலும் இதே போல கொரோனா பாதித்த மணமகனை பிபிஇ உடை அணிந்து கொண்டு மணப்பெண் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications