ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்பது வழக்கு. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு நீதிபதியாக முடிகவுடா விசாரித்தார். தற்போது புதிய நீதிபதியாக ஜான்மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.
நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா இன்று வழக்கை விசாரித்தார். ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருமே ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி இருந்தனர்.
இதைத் தொடர்ந்து இதுவரையிலான வழக்கு விவரங்களை வழக்கறிஞர்களிடம் நீதிபதி கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து வரும் 27ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications