நேரில் வந்து ஆஜராகுங்க.. ஆஞ்சநேயருக்கு சம்மன் அனுப்பிய பீகார் கோர்ட்!
பாட்னா: ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள்... வெண்ணெய் சாத்துவார்கள். ஆனால் இந்துக் கடவுள் ஆஞ்சநேயரை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நீதிமன்றங்கள் எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ளன. சமீபத்தில் கூட இதே பீகாரில்தான் சீதையை கைவிட்டதாக இந்து கடவுள் ராமர் மீது கூட வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Dehri on Sone (Rohtas district, Bihar): SDM Court issues summons to Lord Hanuman to appear in the Court. pic.twitter.com/4dgKGqUmnY
— ANI (@ANI_news) February 16, 2016
அதேபோல சத்தீஸ்கரில் நீதிபதி ஒருவரின் தோட்டத்தில் மேயந்த வெள்ளாடு, அதன் உரிமையாளருடன் கைது செய்யப்பட்டது. பின்னர் ஆடும், அதன் உரிமையாளரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இப்போதும் பீகார் மாநிலத்தில்தான் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பியுள்ளது நீதிமன்றம். அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் தெக்ரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிராக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் மாநில அரசின் பொதுப்பணித்துறை புகார் தெரிவித்து உள்ளது.
இதனையடுத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிஉள்ளது. நீதிமன்றம் அனுப்பிய சம்மனின் நகலானது, ஆஞ்சநேயர் சிலையில் தொங்கவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகி உள்ளது. இது தற்போது விவாதத்திற்குள்ளாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications