"நோ மாட்டுக்கறி".. இந்துக்கள் அதிகமுள்ள பகுதியில் விற்க தடை..மீறினால் ஜெயில்.. பாஜக முதல்வர் அதிரடி

மாட்டிறைச்சியை விற்க அஸ்ஸாமில் தடை செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டிஸ்பூர்: அசாம் மாநிலத்தில், கோயில்களின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது... மீறினால், 3 வருடங்கள் ஜெயில் தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமில், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்..

புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.. மேலும், 126 சட்டமன்ற இடங்களில் கிட்டத்தட்ட 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் முக்கிய காரணியாகவும் விளங்கி வருகிறார்கள்.

 அஸ்ஸாம்

அஸ்ஸாம்

இந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.. வடகிழக்கு ஜனநாயக கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்தான் இந்த பிஸ்வா சர்மா... 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் சரி, 2019 எம்பி தேர்தலிலும் சரி, 2021 சட்டப்பேரவை தேர்தலும்சரி, அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியமான நபரே இவர்தான்..

 பாஜக

பாஜக

இவர் இல்லாவிட்டால் அங்கு பாஜக காலூன்றி இருக்கவே முடியாது.. பாஜகவுக்கு இவர் பெரும் பணியாற்றியதால்தான், முதல்வர் பதவி இப்போது அவரை தேடி வந்தது. இந்நிலையில், இவரது சமீபத்திய அறிவிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

 அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்


சில தினங்களுக்கு முன்பு, புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவர்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால்தான் நில ஆக்கிரமிப்பு போன்ற சமூக அச்சுறுத்தல்களை தீர்க்க முடியும், கண்ணியமான குடும்ப கட்டுப்பாட்டுக் கொள்கையை, சிறுபான்மை சமூக மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 பரபரப்பு

பரபரப்பு

பாஜக முதல்வரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அசாம் மாநிலத்தில், கோயில்களின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது... மீறினால், 3 வருஷங்கள் ஜெயில் தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 கால்நடைகள்

கால்நடைகள்

இந்த மாநிலத்தின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடைகளை பாதுகாப்பதற்கான புதிய மசோதாவில் இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கால்நடைகளை கொல்வது மற்றும் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது... மேலும், புதிய மசோதாவில், ஒரு கோயிலின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 சட்டவிரோதம்

சட்டவிரோதம்

முறையான ஆவணங்கள் எதுவுமின்றி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு வெளியே கால்நடைகளை கொண்டு செல்வது சட்ட விரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, இந்த புதிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாதாம்.. இந்த குற்றத்திற்கு 3 வருஷம் ஜெயில் தண்டனை அல்லது 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டிற்கும் இடையில் வேறுபடக்கூடிய அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது...

 கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஒருவேளை இதே தண்டனை பெற்ற ஒருவர் 2வது முறையாக அதே குற்றத்தைச் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தண்டனை 2 மடங்காகுமாம்... "கால்நடைகள்" என்றால் காளைகள், மாடுகள், பசு, கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமை கன்றுகள் என எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.. இதனால் அம்மாநில மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+