மாவோயிஸ்டுகள் மீதான தடையை நீக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை!
விசாகப்பட்டினம்: மாவோயிஸ்ட்டுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய- மாநில அரசுகள் நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.நாராயணன் கூறியதாவது:
இடதுசாரி தீவிரவாதத்தை இந்த அரசு சமூக- பொருளாதார பிரச்சனையாக கருதாமல் வெறும் சட்டம்- ஒழுங்கு சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்த்து வருகிறது.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார குற்றங்களும், மதம் சார்ந்த வன்முறைகளும் இடதுசாரி தீவிரவாதத்தை விட அதிக ஆபத்தானவையாக உள்ளன.
'தோட்டாவுக்கு தோட்டா' என்ற சித்தாந்தத்தால் சில மாநிலங்களின் பல பகுதிகள் அமைதியற்றுக் கிடக்கின்றன. எனவே, மாவோயிஸ்ட்டுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய- மாநில அரசுகள் நீக்க வேண்டும். நசுக்கப்பட்ட, ஏழை மக்களை உயர்த்திவிடும் நோக்கத்தில் பிறந்தது தான் இடதுசாரி தீவிரவாதம்.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒரு சமூக- பொருளாதார பிரச்சனையாக கருதி நிலங்கள் உள்ளிட்ட இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications