பில்கிஸ் வீடு முன் “பட்டாசு” கடை.. உரிமையாளரும் குற்றவாளி! குஜராத்தில் “ஃப்ரீயாக” சுற்றும் 11 பேர்
குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷியாம் ஷா என்பவர் பில்கிஸ் பானு வீட்டின் முன்பாகவே பட்டாசு கடையை திறந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிந்ததை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூர தாக்குதல்களை இந்துத்துவ அமைப்பினர் நடத்தினர்.
2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

பில்கிஸ் பானு வீடு
பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

கொலை, பலாத்காரம்
அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத்தின் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது.

ஆயுள் தண்டனை
ஆனால், சாட்சிகளை அழித்ததாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.

முன் விடுதலை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டு விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாசு கடை
இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷ்யாம் ஷா என்பவர் பில்கிஸ் பானுவின் வீட்டு முன்பாக பட்டாசு கடை திறந்து இருக்கிறார். பில்கிஸ் பானு வீட்டை வேறு ஒரு பெண் வாடகைக்கு எடுத்து துணிக்கடை நடத்தி வருகிறார். இதற்கு முன் பரோலில் வெளியே வந்த ராதேஷ்யாம் மற்றும் அவரது சகோதரர் மீது பெண் ஒருவரை தாக்கியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications