விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்திற்குள் இருந்தது யார் யார்? வெளியானது லிஸ்ட்
காந்திநகர்: இன்று பிற்பகல் குஜராத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் அருகே இருந்த குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே விமானத்தில் உள்ளே இருந்தது எந்த நாட்டை சேர்ந்தவர்கள்.. குழந்தைகள் எத்தனை பேர்.. பெரியவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்தில் சிக்கியது.. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு கிளம்பிய இந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் ரக விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது.

அந்த விமானம் 1.10 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட வேண்டியது. அது ஏழு நிமிடங்கள் தாமதமாக 1.17 மணிக்கே குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளது. கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அது அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே விமானத்தில் மொத்தம் 230 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் யார்.. எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் மொத்தம் 217 பெரியவர்கள், 11 குழந்தைகள், 2 கைக்குழந்தைகள் என மொத்தம் 230 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 169 இந்திய நாட்டை சேர்ந்தவர்களாகும். மேலும், விமானத்தில் இருந்தவர்களில் 53 பிரிட்டிஷ் நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதுபோக 12 விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் சிக்னல் கட் ஆகியுள்ளது. அப்போது விமானம் சுமார் 600 அடி உயரத்தில், சுமார் 324 கிமீ வேகத்தில் பயணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் அருகே இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்து உடனடியாக கரும்புகை வெளியானது.
Air India B787 Dreamliner aircraft, AI 171 crash, list of passengers pic.twitter.com/i5pkC3QYRm
— IANS (@ians_india) June 12, 2025
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். சுமார் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் 100+ பயணிகள் உயிரிழந்ததாக ரிப்பளிக் டிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications