"90 லட்சம் கொடுத்தால் தான் உடலுறவு!" முதலிரவில் பெண் சொன்ன வார்த்தை.. கதி கலங்கிய மாப்பிள்ளை
ஆக்ரா: திருமணத்திற்குப் பிறகு முதலிரவுக்கு ஆசையாகச் சென்ற இளைஞருக்கு இளம்பெண் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இந்த மாப்பிள்ளைக்கு அந்த இரவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு 'க்ரைம் த்ரில்லர்' படமாகவே மாறியுள்ளது. 90 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உடலுறவு என மணமகள் போட்ட கண்டிஷனை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.
கல்யாணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்டது என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அனைவருக்கும் சொர்க்கத்தைப் போன்ற வாழ்க்கை கிடைப்பதில்லை. மாறாகச் சிலருக்கு மிக மோசமான வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உபி திருமணம்
ஆக்ராவின் ஜெகதீஷ்புரா பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் தம்பிக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து, மணமகள் புகுந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். அன்றிரவு முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது மாப்பிள்ளையும் ஆசையாக அங்கு நுழைந்துள்ளார். அங்கேதான் அந்தப் பெரிய 'ட்விஸ்ட்' காத்திருந்தது.
அதாவது அறைக்குள் பல ஆசைகளுடன் வந்த கணவனிடம், "எனக்கு இப்போதே 90 லட்சம் ரூபாய் ரொக்கமாக வேண்டும். அதைக் கொடுத்தால் மட்டும் தான் நான் உன்னுடன் உறவு வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் என்னைத் தொடக் கூடாது" என மணமகள் கறாராகப் பேசியுள்ளார். இதைக் கேட்டவுடன் மாப்பிள்ளை அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார்.
அதிர்ச்சி
தான் தொட்டு தாலி கட்டிய பெண், தன்னுடன் நெருக்கமாக இருக்கப் பணம் கேட்கிறாரா என்பதை யோசித்து அதிர்ந்து போனார். இதனால் பணம் எல்லாம் தர முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இதைக் கேட்ட குடும்பத்தினர், என்னவென்று விசாரித்துள்ளனர். அந்த பெண் சொன்னதைக் கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருப்பினும், "சி்ன்ன பொண்ணு.. தெரியாம பேசியிருக்கும்" என நினைத்து மாப்பிள்ளை வீட்டாரும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும், அந்த பெண் தனது நிலைப்பாட்டில் மாறாமல் இருந்துள்ளார். மேலும், பணம் கொடுக்க மறுத்ததால் தனது பிறந்த வீட்டுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மணமகளின் உறவினர்கள் அங்குப் படை எடுத்து வந்தனர்.
கொலை முயற்சி
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அது கைகலப்பாக மாறியுள்ளது. இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். குறிப்பாக மாப்பிள்ளை வீட்டாரைப் பெண் வீட்டார் மோசமாகத் தாக்கியுள்ளனர். வீட்டை வெளியே இருந்து பூட்டிச் சிறை பிடித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், அங்கிருந்த பிஎன்ஜி கேஸ் பைப்லைனை உடைத்து, வீட்டை எரிக்கவும் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. கேஸ் கசிந்து ஒரு பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உருவான நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாப்பிள்ளை வீட்டார் ஒருவழியாக உயிர் தப்பினர்.
போலீசாரிடம் புகார்
இது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டார் போலீசாரிடமும் புகாரளித்துள்ளனர். அதில் அந்த மணமகள் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் பணத்திற்காக மட்டுமே இதற்குச் சம்மதித்ததாகவும் ஒப்புக்கொண்டாராம். அதையும் போலீசாரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர். இதற்கு நடுவே மாப்பிள்ளை வீட்டில் இருந்த நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களையும் அந்த பெண் சுருட்டிக்கொண்டு உறவினர்களுடன் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்தப் புகாரை வாங்க உள்ளூர் போலீசார் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இப்போது மணமகள், அவரது தந்தை மற்றும் உறவினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பெண்ணைத் தரகராக இருந்து அறிமுகம் செய்து வைத்த நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications