டிஷ்யூம்... சீக்கியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை ஜாக்குலின் மீது வழக்கு
மும்பை: டிஷ்யூம் படத்தில் சீக்கியர்களின் மத உணர்வைப் புண் படுத்தியதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது பஞ்சாபில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாஜித் தயாரிப்பில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாயகியாக நடித்துள்ள இந்திப் படம் டிஷ்யூம். ரோஹித் தவான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தில் சீக்கியர்களின் ஐந்து மரபுகளில் ஒன்றான, 'கிர்பான்' கத்தியை கிண்டல் செய்யும் விதமாக, ஜாக்குலின் நடித்த பாடல் காட்சி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு...
இதற்கு, சீக்கிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி இது தொடர்பாக சீக்கிய அமைப்பினர் சென்சார் போர்டுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

வழக்குப்பதிவு...
அதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி, மனிதநேயத்திற்கான வழக்கறிஞர்கள் என்ற அமைப்பினர் ஜாக்குலின், சாஜித் உள்ளிட்டோர் மீது பஞ்சாப் மாநிலம் சண்டிகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மறுப்பு...
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை டிஷ்யூம் பட இயக்குநர் ரோஹித் மறுத்துள்ளார். தனது படத்தில் பயன்படுத்தப்பட்டது கிர்பான் கத்தியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பாடலை நீக்க வேண்டும்...
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சீக்கிய அமைப்பினர், சம்பந்தப்பட்ட பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் அல்லது மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அப்பாடலின் காட்சிகளை மாற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கைப் பெண்...
தற்போது வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஜாக்குலின் இலங்கையைச் சேர்ந்தவர். இவர் நடிகர் சல்மானின் காதலி என கிசுகிசுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications