மோடி வருகைக்கு முன்பாக பாட்னாவில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி-70 பேர் காயம்
பாட்னா: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவுக்கு வருகை தருவதற்கு முன்பு அவர் பேச இருந்த மேடைக்கு அருகே அடுத்தடுத்து 7 குறைந்த சக்தி குண்டுகள் வெடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. வெடிக்காத நிலையில், குண்டு ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். மொத்தம் 7 குண்டுகள் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பதட்டம் ஏற்பட்டது.
இந்த வெடிகுண்டு விபத்து ஏற்கனவே திட்டமிட்ட சதியா, இதில் யார் யாருக்குத் தொடர்பு என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சேதார விவரம் குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் தெரிய வரவில்லை.

அறிக்கை கேட்கும் மத்திய அரசு
இந்த குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு.
இதுகுறித்து எஸ்.பி. மனு மஹராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிளாட்பார்ம் எண் 10ல் குண்டுவெடித்தது. அது ஒரு நாட்டு வெடிகுண்டு. அதில் ஒருவர் காயமடைந்தார் என்றார்.

மோடி கூட்ட அரங்குக்கு அருகே இன்னொரு குண்டுவெடிப்பு
அதேபோல மோடி கூட்டம் நடைபெறும் காந்தி மைதானத்திற்கு அருகே உள்ள எல்பின்ஸ்டன் தியேட்டருக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது.
காந்தி மைதானத்தைச் சுற்றி 4 குண்டுகள் வெடிப்பு
மேலும் காந்தி மைதானத்தைச் சுற்றிலும் 3 முதல் 4 குண்டுகள் வரை வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு குறைபாடே காரணம்
மோடி கூட்டத்திற்கு உரிய முறையில் பாதுகாப்பை மாநில காவல்துறை செய்யாமல் போனதே இந்தக் குளறுபடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
4 பேரிடம் விசாரணை
குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மாபெரும் உளவுத்துறை தோல்வி
குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இது உளவுத்துறையின் மாபெரும் தோல்வியாகும் என்றார்.












Click it and Unblock the Notifications