கொடூரம்.. தண்டவாளத்தில் தொங்கவிட்டு.. முதியவரை மிருகத்தனமாக தாக்கிய போலீஸ்காரர்.. வெளியான வீடியோ
போலீஸ்காரர் ஒருவர் முதியவரை தாக்கும் வீடியோ அதிர்ச்சியை தந்து வருகிறது
போபால்: இதயமே நொறுங்கி போகும் அளவுக்கு, ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு வயதானவரை, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மிருகத்தனமாக தாக்கிய கொடூரம் நடந்துள்ளது.
Recommended Video
நாளுக்கு நாள் வடமாநிலங்களில் வன்முறைகள் பெருகி வருகின்றன.. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்த போதும், குற்றங்கள் குறைவதில்லை.
இதற்கு மத்தியப் பிரதேச மாநிலமும் விதிவிலக்கல்.. இன்றும் ஒரு சம்பவம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.. அந்த தாத்தா யார் என்று தெரியவில்லை. அவரை போலீஸ் கான்ஸ்டபிள், அடித்து உதைக்கிறார்..

தண்டவாளம்
போலீஸ்காரரர் அடித்ததால், வலி பொறுக்க முடியாமல், அந்த முதியவர் துடிக்கிறார்.. பிறகு, எழுந்திருக்க முயற்சிக்கும்போது, மறுபடியும் அவரை உதைத்து கீழே தள்ளுகிறார் அந்த கான்ஸ்டபிள்.. 2, 3 முறை, முதியவர் எழுவதற்காக முயற்சித்தபோதெல்லாம், ஓங்கி ஓங்கி அடித்தே அவரை கீழே சாய்க்கிறார் கான்ஸ்டபிள்.. பிறகு, முதியவரின் கால்களைப் பிடித்து தரதரவென இழுத்து, ரயில்வே தண்டவாளம் பக்கத்தில் வருகிறார்..

சஸ்பெண்ட்
தண்டவாளத்தில் தாத்தாவை, கீழே தொங்கவிட்டபடி, அவரது முகத்தில் மறுபடியும் உதைக்கிறார்... இதை அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றனர்.. ஒருத்தரும் முன்வந்து போலீஸ்காரரை தடுக்கவில்லை.. தாத்தாவையும் மீட்கவில்லை.. ரயில்வே சந்திப்பில் நின்று கொண்டிருந்த ரயிலுக்குள், ஒரு பயணி இந்த காட்சியை வீடியோ எடுத்துவிட்டார்.. அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.. கிட்டத்தட்ட 30 செகண்ட், இந்த வீடியோ காட்சிகள் உள்ளன... காண்போரையும் பதற செய்து வருகிறது.

இஸ்லாமியர்
இந்த வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, அந்த கான்ஸ்டபிள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை கண்காணிப்பாளர் ரேவா தெரிவித்துள்ளார்... மேலும் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. மத்திய பிரதேசத்தில் இப்படி அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.. இப்படிதான் 2 மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமியர் என்று நினைத்து ஒரு முதியவரை அடித்தே கொன்றுள்ளனர்..

ஜெயின்
கடைசியில் பார்த்தால், அவர் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவராம்.. அதுமட்டுமல்ல, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் உறுதியானது. அதேபோல, பசுவை கொன்றதாக கூறி, 2 பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் அதற்கு மேல் நிலைகுலைய வைத்துவிட்டது.. காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும், அப்பாவி மக்கள் தாக்கப்படுவது ம.பி.யில் தொடர் கதையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications