ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ரோஜா நடனமாடியதாக வீடியோ.. மார்ஃபிங் செய்த 3 பேரை லபக்கிய போலீஸ்
அமராவதி : ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகையும் நகரி தொகுதி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா நடனமாடுவது போல் மார்ஃபிங் வீடியோவை வெளியிட்ட 3 இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
படத்தைவிட படத்தில் இடம்பெற்றிருந்த சாமி பாடலும் அதைவிட சமந்தா வேற லெவலில் கவர்ச்சி காட்டி நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பெரும் வெற்றி பெற்றது. ஆண்ட்ரியாவின் ஹஸ்கி வாய்ஸும், சமந்தாவின் கிக்கேற்றும் நடனமும் பாடலை உலக அளவில் கொண்டு சென்றது.

ஊ சொல்றியா மாமா பாடல்
யூட்யூபில் தற்போது வரை ஆறரை கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர். மேலும் பலர் கவர் சாங், ரீ கிரியேட் என தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர் இந்த பாடலை வைத்து. அந்தளவுக்கு யூத் செண்டரில் பாட்டு ஹிட்டடித்தது.

ரோஜா போல் மார்ஃபிங்
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வாக இருக்கும் நடிகை ரோஜாவின் உருவத்தை மார்பிங் செய்து ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் நடனம் ஆடுவது போல மார்ஃபிங் செய்யப்பட்ட ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர்.

ரோஜா புகார்
இந்த வீடியோ பலராலும் கைவிடப்பட்ட நிலையில் இதுகுறித்து நடிகை ரோஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தனது புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மார்ஃபிங் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோஜா நகரின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

3 பேர் கைது
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் ரோஜாவின் உருவத்தை வைத்து மார்ஃபிங் செய்து வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டதாக ரமேஷ், டெல்லி, சக்கரபாணி ஆகிய 3 பேரை திருப்பதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் வேறு ஏதும் சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications