Cyclone Biparjoy: ஹை ஸ்பீடை தொட்ட பைபர்ஜாய் புயல்.. 125 கிமீ-இல் குஜராத்தை தாக்கியது! இவ்ளோ பெருசா
காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் நிலையில் தற்போது அதன் அதிகபட்ச வேகம் என கணிக்கப்பட்ட 125 கிலோ மீட்டரை தொட்டு இருக்கிறது.
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான பைபர்ஜாய் புயல் கேரளா கடலோர பகுதிகளில் நிலைகொண்ட நிலையில், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை கடந்து குஜராத் மாநில கடலோர பகுதிகளில் நிலை கொண்டது. பாகிஸ்தானில் இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நூலிழையில் அந்த புயல் நகர்ந்து குஜராத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் தற்போது கரையை கடந்து வருகிறது. இரவு 9 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் கடக்க தொடங்கியது. முன்னதாக குஜராத்தின் கடலோர பகுதிகளில் மற்றும் பாகிஸ்தான் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

புயல் கரையை கடப்பதற்கு முன்பாகவே துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் "பைபர்ஜாய், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (15.06.2023) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு - தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று (15.06.2023) மாலை மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்." என்று தெரிவித்து இருந்தது.

இதற்கு முன்பாக 125 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்றே எச்சரித்து இருந்தது வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில் மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை புயலின் வெளித்தோற்றம் தொட்டது. இந்த நிலையில் இந்த வேகம் படிப்படியாக அதிகரித்து 115 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இந்த நிலையில் புயலின் கண் பகுதி குஜராத்தின் நாலியா, மண்ட்வி, துவாரகா, சலாயா, ஜாம்நகர் உள்ளிட்ட கடலோர பகுதிகளை தொட்டு இருக்கிறது. தற்போது காற்றி வேகமும் மணிக்கு 125 கிலோ மீட்டரை தொட்டு இருப்பதால் அங்கு பெரும் சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications