600 தமிழக மீனவர்களை நீண்ட போராட்டத்துக்குப் பின் அனுமதித்த குஜராத் அரசு!
ஓகி புயலால் கரை ஒதுங்கிய 600 தமிழக மீனவர்களை நீண்ட போராட்டத்துக்கு பின் அனுமதித்தது குஜராத் பாஜக அரசு.
காந்திநகர்: ஓகி புயலால் கரை ஒதுங்கிய 600 தமிழக மீனவர்களை குஜராத் பாஜக அரசு அம்மாநில துறைமுகத்துக்குள் முதலில் அனுமதிக்க மறுத்தது. பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பின் அனுமதித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஏராளமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஓகி புயலில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து ஓகி புயலில் இருந்து தப்பிக்க ஏதுவான கரை ஓரப் பகுதிகளில் தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் கரை ஒதுங்கினர்.

தமிழகம் கேரளா மீனவர்கள்
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் கரை ஒதுங்கினர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பு அளித்தன.

மீனவர்கள் கோரிக்கை
அதேபோல் குஜராத் கடற்பரப்புக்குள் 600 தமிழக மீனவர்கள் சென்றுள்ளனர். அம்மாநில துறைமுகத்தில் கரை ஒதுங்க மீனவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

நடுக்கடலில் தத்தளிப்பு
ஆனால் குஜராத் பாஜக அரசு, தமிழக மீனவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால் 600 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்து வருவதாகவும் கூறப்பட்டது.

மீனவர்கள் நிம்மதி
குஜராத் தேர்தலை முன்வைத்து மீனவர்களை அனுமதிக்க மறுத்ததாக கூறப்பட்டது. தற்போது மீனவர்களை குஜராத் அரசு அனுமதித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications