பாய்லின் புயல் ஆந்திரா, ஒடிஷாவை தாக்கியது! 250 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!!
புவனேஸ்வர்: மிகப் பெரிய புயலான பாய்லின் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிஷாவின் கோபால்பூரைத் தாக்கியது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 250 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி வீசியது.
நேற்று மாலை 6 மணி அளவில் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 6 மணி தொடக்கம் முதல் கரையை நெருங்கியது. பின்னர் இரவு 7.55 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தை பேரிரைச்சலுடன் தாக்கியது.
இதைத் தொடர்ந்து ஒடிஷாவின் கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளையும் பெரும் சூறாவளியை சுமந்து கொண்டு பதம் பார்த்தது பாய்லின் புயல். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீசியது. மழையும் பேய் மழையென கொட்டியது,
இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்தன.

24 மணி நேரம் நீடிக்கும்
இந்த புயலின் தாக்கம் 24 மணி நேரங்களுக்கு நீடிக்கும்.

240 கி.மீ முதல் 300 கி.மீ வரை காற்று
கரையை கடந்த போது மணிக்கு 240 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கரமாக காற்று வீசியது.

சூப்பர் புயல்
கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வங்க கடலில் உருவான சூப்பர் புயல் ஒடிஷாவை தாக்கிய போது மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மழையும் கொட்டித்தீர்த்தது. அந்த புயல் மற்றும் மழையின் காரணமாக ஒடிசாவில் பலத்த சேதம் ஏற்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சக்தி வாய்ந்த பாய்லின்
ஒடிஷாவை அப்போது தாக்கிய சூப்பர் புயல், மிகவும் சக்தி வாய்ந்த 5-வது வகை புயல் ஆகும். இப்போது தாக்க இருக்கும் பாய்லின் புயல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள சக்தி வாய்ந்த 4-வது வகை புயல் என்று லண்டனில் உள்ள புயல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. புயல் கரையை நெருங்குவதற்கு முன்பே ஒடிஷா, ஆந்திர மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

7 லட்சம் பேர் வெளியேற்றம்
இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். ஒடிஷாவில் 7 மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications