டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு!
அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயலால் 13 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார்.

அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவானது டவ்-தே புயல். இது அதிதீவிர புயலாக வலுவடைந்து திங்கள்கிழமையன்று இரவு முதல் அதிகாலை வரை குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கரையை கடந்தது.
தற்போது வலுவிழந்த நிலையில் ராஜஸ்தானுக்குள் இந்த புயல் நகர்ந்துள்ளது. குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை குஜராத்தில் டவ்-தே புயலால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார்.
மேலும் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது; 69,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன; 674 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் வேளாண்பயிர்களும் சேதமடைந்துள்ளன என்றார் முதல்வர் விஜய் ரூபாணி.
இதனிடையே குஜராத்தில் புயல் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை குஜராத்தின் பாவ்நகர் செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்பை பார்வையிடுகிறார். டையூ, மஹூவா உள்ளிட்ட பகுதிகளையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications