ஜெகன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு! பதவி விலகுகிறார் அமைச்சர் கீதா ரெட்டி?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தமது தந்தையும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயரை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகாலமாக ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவில் தீர்ப்பு வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே ஹைதராபாத் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் 2 புதிய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஆந்திர மாநில காங்கிரஸ் அரசின் அமைச்சர் கீதா ரெட்டி உள்பட பலருடைய பெயர் இடம் பெற்று இருக்கிறது.
பிரதிபலனை எதிர்பார்த்து ஜெகன்மோகன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஜெகன்மோகனுக்கு எதிரான இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் இதுவரை 8 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருக்கிறது. இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறாராம் கீதா ரெட்டி.












Click it and Unblock the Notifications