தபோல்கர் படுகொலைக்கான புல்லட்டுகள் பெலகாவியில் இருந்து 'சப்ளை'- தீவிரவாதி தாவ்டே வாக்குமூலம்
புனே/பெலகாவி: மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி புல்லட்டுகள் கர்நாடகாவின் பெலகாவியில் இருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2013-ம் ஆண்டு நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த வீரேந்திர தாவ்டேவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது தபோல்கர் மட்டுமின்றி சிந்தனையாளர்கள் பன்சாரே, கல்புர்க்கி உள்ளிட்டோர் படுகொலையிலும் இந்த தீவிரவாத கும்பலுக்கு தெரியவந்தது.
சனாதன் சன்ஸ்தா இயக்கம்தான் கடந்த 2009-ம் ஆண்டு கோவாவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது. இந்த இயக்கத்தின் தலைவர் அல்கோர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிப்பதற்காக இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலக்கியங்கள்= துப்பாக்கிகள்
தற்போது சிக்கியுள்ள வீரேந்திர தாவ்டேவிடம் அல்கோர் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அல்கோருடனான இமெயிலில் பயன்படுத்தப்பட்டு வரும் கோட்வேர்டுகள் என்ன? அதற்கு என்ன அர்த்தம்? என்பது குறித்தும் தாவ்டேவிடம் துருவித் துருவி விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போதுதான், இந்தியாவில் "உள்நாடு மற்றும் வெளிநாட்டு இலக்கியங்களை" தயாரிக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற மெயில் குறித்து கேட்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியங்கள் என்பதற்கு கள்ளத்துப்பாக்கி மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் என்பதுதான் அர்த்தம் என கூறி அதிரவைத்திருந்தார் தாவ்டே.

15,000 பேர் கொண்ட ராணுவம்
இந்துத்துவா எதிர்ப்பாளர்களைத் தாக்குவதற்காக 15,000 பேர் கொண்ட ராணுவம் ஒன்றை அமைக்கவும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டதாகவும் தாவ்டே கூறியிருந்தார். இந்த இயக்கத்தைச் சேர்ந்த மல்கோண்டா பாட்டீல் என்பவர் கோவாவுக்கு வெடிகுண்டுகளை கொண்டு செல்லும் போது உயிரிழந்துவிட்டதாகவும் தாவ்டே தெரிவித்திருக்கிறார்.

புல்லட்டுகள்= சாக்லேட்டுகள்
தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த விசாரணையில் தபோல்கர் படுகொலைக்கு பயன்படுத்த புல்லட்டுகள், கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இருந்து சப்ளை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த புல்லட்டுகளுக்கும் கோட்வேர்டாக 'சாக்லேட்டுகள்' என்பதை இக்கும்பல் பயன்படுத்தியிருக்கிறது. இதனால் பெலகாவியிலும் இந்த அமைப்பு மும்முரமாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்ததுள்ளது.

பெலகாவி தொடர்புகள்
இதனால் பெலகாவியிலும் மேலும் சிலர் சிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இதுவரை கோவா, குண்டு வெடிப்பு மற்றும் சிந்தனையாளர்கள் படுகொலைகளில் தாவ்டே உட்பட மொத்தம் 6 பேருக்கு தொடர்பிருப்பதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications