Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகாரில் சூனியக்காரி என தலித் பெண் நிர்வாணம்... சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

பீகார்: பீகார் மாநிலத்தில் தலித் பெண் ஒருவரை சூனியக்காரி எனகூறி அவரை நிர்வாணம் செய்து அவரது சிறுநீரை அவரை குடிக்கவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் இந்த வெக்கக்கேடான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலித் இன மக்கள் மீதான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பீகாரில் குறைந்ததாக தெரியவில்லை. இந்த சம்பவம் சாதிய ரீதியில் நடைபெறவில்லை என்றபோதிலும், மூட நம்பிக்கையில் திளைத்துள்ள பொதுமக்களின் அறியாமையால் நிகழ்ந்துள்ளது என கூறப்படுகிறது.

Dalit Woman Accused Of Being A Witch, Forced To Drink Urine in Bihar

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் அஜய் பாஸ்வன் குஜராதில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தலித் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த நபர்கள், அந்த பெண்ணை நிர்வாணப் படுத்தி, அந்த பெண்ணின் சிறுநீரை அவரையே வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அப்பெண் கிராமத்தில் இருந்து வெளியேறி தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பிப்ரா கிராமத்தில் குழந்தைகள் சிலருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் உடல்நலக் குறைவுக்கு சூனியம் வைத்துள்ளது தான் காரணம் அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து தலித் பெண் ஒருவரை சூனியக்காரி எனகூறி, 4 நபர்கள் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் சிறுநீரை, வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணையை குடிக்க வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூலை 16-ந் தேதி பீகார் மாநிலத்தில் நெகரா பகுதியில் உள்ள பைதான் கபாய் கிராமத்திலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு தலித் பெண் மற்றும் அவரது மகள் நிர்வாணமாக்கப்பட்டு, சிறுநீரை குடிக்க வைக்கப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்களான அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கமிஷன் தரவில்லை எனகூறி இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

A Dalit woman was allegedly beaten up and forced to drink her urine by four men after branding her as a "witch" at Pipra village in Bihar's Darbhanga district, police said.

பீகார் மாநிலத்தில் தலித் பெண் ஒருவரை சூனியக்காரி எனகூறி அவரை நிர்வாணம் செய்து அவரது சிறுநீரை அவரை குடிக்கவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா கிராமத்தில் குழந்தைகள் சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. குழந்தைகள் உடல்நலக் குறைவுக்கு சூனியம் வைத்துள்ளது தான் காரணம் அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து தலித் பெண் ஒருவரை சூனியக்காரிஎனகூறி, 4 நபர்கள் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் சிறுநீரை, வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணையை குடிக்க வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+