என் அப்பாதான் என் தோழியை பலாத்காரம் செய்தார்.. மகளின் புகாரால் தந்தை கைது!
டெல்லியில் தனது தந்தைதான் தனது தோழியை பலாத்காரம் செய்ததாக பெற்ற மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் தனது தந்தைதான் தனது தோழியை பலாத்காரம் செய்ததாக பெற்ற மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 18 வயதில் மகள் ஒருவர் உள்ளார். சட்டப்படிப்பு படித்து வரும் அவரும் அப்பகுதியை சேர்ந்த அதே வயதுடைய மற்றொரு பெண்ணும் தோழிகளாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிமை அந்த பெண் தனது தோழியை பார்க்க தொழிலதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தோழியின் தாய் வெளியூர் சென்றிருந்ததால் இரவு தன்னுடனேயே தங்க வைத்துள்ளார் அந்த பெண்.

மதுக்குடித்த தந்தை
தாய் இல்லாததால் இரவு டின்னருக்காக அவரது தந்தை தனது மகளையும் அவரது தோழியையும் அங்குள்ள சைபர் ஹப்புக்கு அழைத்து சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்த அந்த பெண்ணின் தந்தை, பின்னர் அவர்கள் 2 பேரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

தோழியை எழுப்பிய தந்தை
பின்னர் அந்த பெண் தனது தோழியுடன் அவரது அறையிலேயே படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணின் தந்தை அவரது தோழியை எழுப்பியுள்ளார்.

பலாத்காரம் செய்த தந்தை
தனியாக பேச வேண்டும் வெளியில் வா என கூறி அழைத்து தனது அறைக்கு அந்த பெண்ணை கூட்டிச்சென்ற தொழிலதிபர் மகளின் தோழி என்றும் பாராமல் அவரை தனது படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் தன்னை விட்டு விடும் படி கதறியும் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

போலீஸில் புகார்
இதையடுத்து தனது வீட்டிற்கு சென்ற அந்த பெண் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.

தந்தை மீது மகளே புகார்
இந்நிலையில் தனது தந்தை குடிபோதையில் தனது தோழியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார். மூன்று பேரின் புகாரை தொடர்ந்து அந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications