நம்புங்கள், தாவூத் இங்கே இல்லை- சொல்கிறார் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்
லக்னோ: பாகிஸ்தானில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் இல்லை என்று தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதரான அப்துல் பாசித்.
1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, தாவூத் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதற்கான தக்க ஆதாரங்களை வழங்கிவிட்டோம். ஆனாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், பாகிஸ்தானில் இருந்து தாவூத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிக்கு முன்பாக நிறுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று கூறினார்.
ஆனால், தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து உள்ளது. லக்னோவில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம், தாவூத்தை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்குமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அப்துல் பாசித், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், இந்த கேள்விக்கு என்னால் ஒன்றை மட்டுமே பதிலாக சொல்ல இயலும். அந்த "ஜென்டில்மேன்" எங்கள் நாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications