இதோ ஒரு உண்மையான ”ஹீரோ” – குடியரசு பதக்கம் வாங்கிய மறுநாளே நாட்டுக்காக உயிர்விட்ட ராணுவ வீரர்
டெல்லி: குடியரசு தின பதக்கம் அறிவிக்கப்பட்ட மறுநாள் ராணுவ அதிகாரி ஒருவர் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பலியான விதம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீர தீர செயலுக்காக குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட யுத் சேவா பதக்கம் பெற்றவர்களில் ராணுவ கர்னல் முனிந்திர நாத் ராயும் ஒருவர்.
அவர், மென்மையான இதயம் கொண்ட துணிச்சலான அதிகாரி என்று பெயர் பெற்றவர்.

துணிச்சலான வீரர்:
காஷ்மீர் பள்ளத்தாக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளத்தால் தத்தளித்தபோது, துணிச்சலுடன் செயல்பட்டு, நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றினார்.
குடியரசுத் தின பதக்கம்:
இதற்காகவே அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும், காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 50 ஆப்பிள் விவசாயிகளை சிம்லாவுக்கு அனுப்பி வைத்து, ஆப்பிள் விவசாயத்தின் லாப நுணுக்கங்களை கற்றுக் கொள்ள செய்தவர்.

அன்பான குடும்பம்:
இத்தகைய பின்புலம் கொண்ட கர்னல் முனிந்திர நாத் ராய்க்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டபோது, குடும்பத்தினரும், உறவினர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வடிந்தேபோன மகிழ்ச்சி:
ஆனால், அந்த மகிழ்ச்சி 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மறுநாள், அதாவது 27 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் திரால் பகுதியில் அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேடுதல் வேட்டை:
திரால் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இரண்டு பேரை பிடிப்பதற்காக, கர்னல் முனிந்திர நாத் ராய் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவருக்கு உதவியாக, காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவரும் ஈடுபட்டார்.
அடைக்கப்பட்ட வழிகள்:
குறிப்பிட்ட அந்த வீட்டை முனிந்திர நாத் ராயின் குழுவினர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் எங்கும் தப்பிச் செல்ல முடியாத வகையில், அனைத்து வழிகளையும் அடைத்தனர்.

தந்தை கெஞ்சல்:
ராணுவ குழுவுக்கு தலைமை தாங்கி, முன்வரிசையில் நின்றார் கர்னல் ராய். வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க அவர் தயாரானார்..
நெஞ்சை கரைய வைத்த அழுகை:
அப்போது, அந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் கேட்டது. வீட்டுக்குள் இருந்து தீவிரவாதியின் தந்தையான முதியவர் கூப்பிய கரங்களுடன் ஓடி வந்தார். "என் மகனை சுட்டுக் கொன்று விடாதீர்கள்" என்று கர்னலின் காலில் விழுந்து கெஞ்சினார். தன் மகனை சரண் அடைய வைப்பதாக அவர் உறுதி அளித்தார்.
முடிவெடுக்க வேண்டிய நிலை:
அப்போது வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது அல்லது முதியவரின் கெஞ்சலுக்கு பணிந்து தீவிரவாதிகளை சரண் அடைய அனுமதிப்பது ஆகிய இரண்டு வழிமுறைகள்தான் கர்னல் ராய்க்கு இருந்தன. வேகமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார்.
சுட்டு கொன்ற தீவிரவாதிகள்:
அந்த இக்கட்டான நேரத்திலும் அவர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டார். முதியவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். யாரும் சுட வேண்டாம் என்று உத்தரவு போட்டார். முதியவர் வீட்டுக்குள் சென்றார்.
காத்திருந்த கர்னல்:
அவர் மீதான நம்பிக்கையில், கர்னல் ராய், வெளியே காத்திருந்தார். ஆனாலும், அவருக்கு ஒவ்வொரு விநாடியும் பதற்றமாக இருந்தது. மற்ற ராணுவ வீரர்கள், சண்டையிடும் நிலையில் இருந்து சகஜ நிலைக்கு மாறி இருந்தனர்.
துப்பாக்கி குண்டு மழை:
இரண்டு நிமிடங்கள் மயான அமைதி நிலவியது. திடீரென, கதவை திறந்து கொண்டு, இரண்டு தீவிரவாதிகளும் துப்பாக்கி குண்டுகளை மழையாக பொழிந்தனர்.
உயிரிழந்த ஹீரோக்கள்:
முன்வரிசையில் நின்று கொண்டிருந்த கர்னலையும், அவருக்கு உதவியாக வந்திருந்த போலீஸ்காரரையும் குண்டுகளால் சல்லடையாக துளைத்தனர். இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். அதற்குள் சுதாரித்து கொண்ட மற்ற ராணுவ வீரர்கள், அந்த தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.
உடல் தகனம்:
வீர மரணம் அடைந்த கர்னல் ராயின் உடல், நேற்று டெல்லி கண்டோன்மெண்டில் தகனம் செய்யப்பட்டது. ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக் மலர் அஞ்சலி செலுத்தினார். ராயின் மனைவி மற்றும் பிள்ளைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இறுதி அஞ்சலி செலுத்தியது காண்போரின் கண்களை குளம் ஆக்கியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications