குளிர்பானத்திற்குள் ‘பாம்புக்குட்டி’: குளிர்பானத்தை அருந்திய சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே இரண்டரை வயது சிறுமி அருந்திக் கொண்டிருந்த குளிர்பான பாட்டிலில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டது. குளிர்பானத்தை அருந்திய சிறிது நேரத்தில் சிறுமி மயக்கமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாஜிவ் என்ற நபர் தனது இரண்டரை வயது மகளுக்காக ஒரு பிரபல குளிர்பான நிறுவனத்தின் அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட மாம்பழ ஜூஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்தக் குளிர்பானத்தை அருந்திக் கொண்டிருந்த சிறுமி உள்ளே ஏதோ ஒரு பொருள் அடைப்பதை உணர்ந்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரும் அந்த குளிர்பான அட்டைப் பெட்டியை பிய்த்துப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.
காரணம் உள்ளே சிறிய பாம்புக்குட்டி ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து சாஜிவ் மீள்வதற்கு முன்னதாகவே, குளிர்பானத்தை அருந்திய அந்தச் சிறுமி மயங்கி கீழே விழுந்துள்ளாள்.
மகளை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த சாஜிவ், அதேகையோடு குளிர்பானத்தில் பாம்புக்குட்டி கிடந்தது பற்றி போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார், போலீசார் நடத்திய விசாரணையில் குளிர்பானம் காலாவதியானது தெரிய வந்தது. குளிர்பானத்திற்குள் பாம்புக்குட்டி வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கேண்டீனில் விற்பனை செய்யப்பட்ட உணவு பாக்கெட்டில் செத்துப்போன விரியன் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications