ஒடிசா கண்ணிவெடி தாக்குதலில் பலியான போலீசார் எண்ணிக்கை 7ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
ஒடிசா: ஆந்திரா - ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் பலியான போலீசார் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் ஒருவரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.
ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள கோரபுட் மாவட்டம் சுங்கி அருகே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாவோயிஸ்ட்கள் வைத்திருந்த கண்ணி வெடியில் அவர்கள் சென்ற வாகனம் சிக்கியது. இதில் 5 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 2 போலீஸ்காரர்கள் பலியாகினர். இதனால், போலீசாரின் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications