ராகுலுக்கு மற்றொரு செட்பேக்..அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்கு தர ஜார்க்கண்ட் கோர்ட் மறுப்பு!
ராஞ்சி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு தர முடியாது என ஜார்க்கண்ட் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது ராகுல் காந்திக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து விமர்சித்தார் என்பது அவதூறு வழக்கு. இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.

இந்த 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
இதே புகாருட்ன் ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஜார்க்கண்ட் எம்பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற்த்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். ராகுல் காந்தி மனுவை ஜார்க்கண்ட் சிறபு நீதிமன்றம் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் முடிவில், விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு தர முடியாது என திட்டவட்டமாக கூறியது ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம். இது ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications