டெல்லி கோர்ட் கடும் கண்டனம்.. அடித்துப் பிடித்து நேரில் ஆஜரான அரவிந்த் கேஜ்ரிவால்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார்.

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Defamation case: Kejriwal, Sisodia, Yadav appear before Delhi court

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பிற்பகல் 2 மணிக்குள் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் நீதிமன்றம் மீண்டும் கூடியபோது அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, யோகேந்திரா யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் மே மாதம் 2-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+