போர் விமானத்தில் பயணித்த நிர்மலா சீதாராமன்.. பாதுகாப்பு சோதனை நடத்தினார்!
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்.
Recommended Video

ஜெய்ப்பூர்: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார். இதற்காக அவர் சுகோய் 30எம்கேஐ விமானத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
இது இரண்டு பேர் பயணிக்க கூடிய விமானம் ஆகும். இவர் பாதுகாப்பு சோதனைகள் செய்வதற்காக இப்படி பறந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் சில முக்கிய நபர்கள் மட்டுமே இப்படி போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம்
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பறந்த போர் விமானம் சுகோய் 30எம்கேஐ விமானம் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் அமரலாம். நிர்மலா சீதாராமனும் முதல் நிலை பைலட்டும் இதில் பயணித்தார்கள்.

எந்த இடத்தில் இருந்து
இன்று காலை நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் சென்றடைந்தார். அங்கு இருக்கும் ஜோத்பூர் விமான படை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் உரையாடினார். பின் அங்கிருந்து சுகோய் போர் விமானத்தில் கிளம்பி இருக்கிறார்.

காரணம் என்ன
நிர்மலா சீதாராமன் சமீப காலமாக பாதுகாப்பு துறையின் மூன்று படைகளிலும் திடீர் சோதனை நடத்தி வருகிறார். ஏற்கனவே கடற்படையில் சோதனை நடத்தினார். ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் பயணித்து அதன் செயல் திறனை சோதனை செய்தார்.

தொடரும்
இது போன்ற சோதனைகள் மேலும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு துறையை வலுப்படுத்த இப்படி செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்தியா எல்லையான டோக்லாமில் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு வீரர்களுடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications