ரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்!
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன் தினம்( வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது பயங்கர விபத்தில் சிக்கியது.

பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த போது ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி சின்னாபின்னமாகின. ஒன்றன் மீது ஒன்று ஏறி பெட்டிகள் உருக்குலைந்து கிடந்தது. விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் 2 ரயில்கள் பயணிகள் ரயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர்.
இந்த கோர விபத்தில் விபத்தில், இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 803 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும், அனைவரும் குணம் அடைந்து நலம் பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணமா அல்லது மனித தவறுகளா? என்று பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. இதனிடையே, ரயில் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தென்கிழக்கு பிராந்திய சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடு உள்ளதாக எச்சரிக்கை தெரிவித்து இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு தலைமை செயல்பாட்டு மேலாளர் கடிதம் எழுதியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கர்நாடகா ஹேசதுர்கா ரயில் நிலையத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி இரு ரயில்கள் மோதும் நிலைக்கு சென்றதாகவும் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை லோகோ பைலட் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, பிப்ரவரி 8 ஆம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றுடன்மோதும் நிலைக்கு சென்றதாகவும் இதை சுட்டிக்காட்டி தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று விவாதங்கள் கிளம்பும் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் இந்த வழித்தடத்தில் 20 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் சிக்னல் குறைபாடு இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications