விமான பணிப்பெண் தற்கொலையில் அதிர்ச்சி தகவல்.. தோழிக்கு கடைசியாக அனுப்பிய அந்த எஸ்எம்எஸ்!
டெல்லியில் விமானப் பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: விமானப் பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் சமீபத்தில் விமான பணிப்பெண் அனிசா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அவரது கணவர் மாயங் சிங்வி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
தனது மகள் அனிசா பத்ராவை அவரது கணவர் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், அனிசாவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

தற்கொலைக்கு முன் எஸ்எம்எஸ்
மேலும், அனிசா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது கணவருக்கு தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

14 நாள் நீதிமன்ற காவல்
இதையடுத்து, அனிசாவின் கணவர் மாயங் சிங்வி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாய்ங் சிங்வியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

செல்போன் ஆய்வு
இதைத்தொடர்ந்து அனிசாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அனிசா மற்றும் அவரது கணவரின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

தோழிக்கு மெசேஜ்
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அனிசா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தோழிகள் சிலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அதில் ஒரு தோழிக்கு தனது கணவர் தன்னை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கோபமாக பேசிய கணவர்
இதைத்தொடர்ந்து அந்த தோழியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அனிசா தற்கொலை செய்துகொள்ளும் அன்று பகல் 1.30 மணிக்கு அவரது கணவர் தனக்கு போன் செய்ததாகவும், அப்போது அவர் பயங்கர கோபமாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு உதவி செய்
இருவரும் பிரிந்து வாழ ஆசைப்பட்டால் வக்கீலை பாருங்கள் என தான் அலோசனை கூறியதாகவும் அவர் தெவிரிவித்தார். இதைத்தொடர்ந்து பிற்பகல் 3.56 மணிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்த அனிசா தனது கணவர் தன்னை அறையில் அடைத்து வைத்துவிட்டதாகவும் தனக்கு உதவிசெய், போலீஸிடம் சொல் என மெஸேஜ் அனுப்பியிருந்தார் என்றும் கூறினார்.
|
இனி சரிசெய்ய முடியாது
அப்போது தான் வெளியே இருந்ததால் அனிசாவுக்கு உதவ முடியவில்லை என்றும் தோழியின் வீட்டுக்கு செல் என பதில் மெஸேஜ் அனுப்பியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அடுத்த சிறிது நேரத்தில் நான் இந்த முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டுவிட்டேன், நடந்தவற்றை இனி சரிசெய்ய முடியாது என மெஸேஜ் அனுப்பியிருந்தார் என்றும் அந்த தோழி கூறியுள்ளார்.

கணவரின் டார்ச்சர்
மேலும் கடந்த சில மாதங்களாக கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தனியாக வீடு பார்த்து வந்தார் என்றும் அனிசாவின் தோழி கூறியுள்ளார். இதன்மூலம் கணவரின் டார்ச்சரே விமான பணிப்பெண் மரணத்திற்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications