டெல்லி: வானொலி நிலைய கேட்டில் மோதிய போலீஸ்காரரின் கார் - தீவிரவாதி என கருதி துப்பாக்கிச் சூடு
டெல்லி: டெல்லியில் கார் ஓட்டி வந்த போலீஸ்காரர் திடீரென காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் நிலை தடுமாறி ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையத்தின் கேட் மீது மோதியது. இதையடுத்து அங்கிருந்து பாதுகாப்பு போலீஸ்காரர், தீவிரவாதிதான் தாக்குகிறார்களோ என நினைத்து துப்பாக்கியால் சுட்டதில் காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
டெல்லி காவல்துளையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அங்கித் குமார் (30). இவர் இன்று அதிகாலை ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையம் அருகே கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறி ஓடிய கார் வானொலி நிலைய கேட்டில் போய் மோதியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாகாலாந்து காவல்துறையைச் சேர்ந்த காவலர் தீவிரவாதத் தாக்குதல் என நினைத்து காரில் இருந்த அங்கித் குமார் மீது சரமாரியாக சுட்டார். இதில் அங்கித் குமார் படுகாயமடைந்தார்.
இதில் அங்கித் குமாரின் இடதுபுற மார்பில் துப்பாக்கிக் ககுண்டு பாய்ந்தது. அவரை உடனடியாக லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராணன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் தற்போது அபாயக் கட்டத்தத் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
தனது மாருதி ஸ்விப்ட் காரில் ஜாலியாக தனது நண்பர்களோடு போயுள்ளார் அங்கித் குமார். பின்னர் அனைவரும் மதுவும் அருந்தியுள்ளனர். இதில்தான் கார் தாறுமாறாக போய் விட்டது.
தற்போது அங்கித் குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications