டெல்லியில் தூங்கி வழிந்து காரை ஓட்டி 3 பெண்களை கொன்ற சப்-இன்ஸ்பெக்டர்
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள பதர்பூர் பகுதியில் இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூங்கி வழிந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏறி 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
டெல்லி காவல் துறை கட்டுபாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரிஷி பால்(59). அவருக்கு திங்கிட்கிழமை இரவு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இரவு பணி முடிந்து ரிஷி நேற்று காலை தனது காரில் வீட்டுக்கு சென்றுள்ளார். மெஹ்ராலி-பதர்பூர் சாலையில் செல்கையில் அவர் தூங்கிவிட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

கார் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் 3 பேர் மீது மோதியது. இதில் சகுந்தலா(55), மீரா(50) மற்றும் மாயா(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரிஷியை கைது செய்துள்ளனர்.
டெல்லியில் லஞ்சம் தர மறுத்த பெண்ணை செங்கல்லால் போலீஸ்காரர் ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்த கையோடு சப்-இன்ஸ்பெக்டர் காரை ஏற்றி 3 பெண்களை கொன்றுள்ளார்.
ரிஷியின் கார் வேகமாக வந்து அந்த பெண்கள் மீது மோதியாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications