Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் வரலாறு காணாத பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி!: பா.ஜ.க, காங். படுதோல்வி!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மாநிலத்தில் மாபெரும் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. கருத்து கணிப்புகளைத் தாண்டி 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளள எண்ணும் பணி இன்று காலை 8 மணி தொடங்கியது. முதல் அரை மணி நேரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி இருப்பதாக தோற்றம் இருந்தது.

Delhi election results: Trends suggest AAP set for two-third majority, BJP faces huge setback

ஆனால் போகப் போக ஆம் ஆத்மி அதிரடியாக தனிப்பெரும்பான்மையையும் தாண்டி மாபெரும் வெற்றியாக மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் முன்னிலை வகித்து அத்தனன தொகுதிகளளயும் கைப்பற்றியது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் படுதோல்வியை சந்தித்துவிட்டன.

டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் பாரதிய ஜனதாவோ 31 தொகுதிகளைக் கைப்பற்றி முதன்மை கட்சியாக இருந்தது.

ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்காக முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார். மொத்தம் 49 நாட்கள் மட்டுமே அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி செலுத்தினார்.

இதன் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அத்துடன் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சட்டசபை கலைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இம்முறை ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியினர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினர். மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதாவும் தீவிரம் காட்டியது.

இருப்பினும் தொடர்ந்து வந்த கருத்து கணிப்புகள் பலவும் இம்முறை ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தன. இந்த கருத்துக் கணிப்புகள் முடிவின் படியே தற்போது தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.

இன்று காலை வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. அதன் பின்னர் பாரதிய ஜனதா கடும் போட்டியை உருவாக்கும் நிலை உருவானது.

ஆனால் ஒரு மணிநேரத்தில் நிலைமை தலைமைகீழானது. கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் 31 தொகுதிகளைக் கைப்பற்றி முதல் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி வெறும் 3 தொகுதிகளில்தான் முன்னிலை வகித்தது.

அதே நேரத்தில் 2013-ல் 28 தொகுதிகளைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்த ஆம் ஆத்மியோ தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 36 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் பெரும்பான்மையாக 67 தொகுதிகள் வரை முன்னிலை வகித்தது

கடந்த 2013-ல் 8 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியோ இம்முறை கருத்துக் கணிப்புகள் கூறியபடியும் கூட ஒரு தொகுதியிலும் கூட வெல்ல முடியாமல் போனது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அஜய்மக்கான் படுமோசமான தோல்வியை சதார் பஜார் தொகுதியில் எதிர்கொண்டார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் அக்கட்சியின் 140 எம்.பிக்கள் என பெருமளவிலான பிரசாரத்தை பாரதிய ஜனதா செய்து பார்த்தும் அக்கட்சியால் கடந்த முறை வென்ற தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாத படுதோல்வியே ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய பாரதிய ஜனதா கட்சியால் தலைநகர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் மட்டுமல்ல 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருப்பது அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

அதேநேரத்தில் எந்த ஒரு இடத்தையும் பெறாத காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியபடி, மிகப் பெரிய பேரழிவாகத்தான் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மக்களின் பெருநம்பிக்கையைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியை ஆம் ஆத்மி பெற்றிருப்பது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகாலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது டெல்லி மாநிலம். இங்கே பாரதிய ஜனதாவும் வேரூன்ற முயற்சித்தது. ஆனால் இந்த இரு பிரதான தேசிய கட்சிகளை தேர்ந்தெடுக்காமல் ஊழலை ஒழிப்போம் என்ற ஆம் ஆத்மியை டெல்லி வாக்காளர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதனால் இதுநாள் வரை ஆம் ஆத்மி மேற்கொண்டு வந்த ஊழல் எதிர்ப்பு முழக்கங்களை டெல்லியில் முழு வீச்சில் செயல்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+