ஒட்டுக்காக கண்ணீர் விட்டு… உருகி உருகி வாக்கு சேகரித்த கிரண்பேடி
டெல்லி: தேர்தல் பிரச்சாரம் என்றாலே ஒருவருக்கொருவர் வசை பாடுவதும், குற்றம்சாட்டுவதும் சூடுபறக்கும். ஆனால் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி டெல்லியில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் கொடுத்த ஆதரவைப் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ளதால் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லி கிருஷ்ணநகர் தொகுதியில் இன்று கிரண் பேடி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.
"போலி நிறுவனங்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சி நிதி பெற்றுள்ளது. இதில் அக்கட்சியும் அதன் தலைவர்களும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்" என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், "என் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கைதாக தயார்" என கூறியிருந்தார்.
இவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய கிரண் பேடி, "எப்படியாவது தொலைக்காட்சி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அர்விந்த் கெஜ்ரிவால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுகிறார்" என்று கூறினார்.

மக்கள் வரவேற்பு
முதல் முறையாக தேர்தல் களம் காணும் அவருக்கு வழி நெடுகிலும் கூடியிருந்த மக்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்தனர். கூடியிருந்த மக்கள் கிரண்பேடிக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தனர். சிலரோ பிரசாரத்தில் களைப்படைந்த கிரண் பேடிக்கு பிளாஸ்குகளில் டீ கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தனர்.

கிரண்பேடி நெகிழ்ச்சி
இதனைக் கண்ட கிரண் பேடி நெகிழ்ச்சியடைந்தார். அவரது கண்களில் கண்ணீல் மல்கியது. அவரால் சிலநிமிடங்கள் பேச முடியவில்லை. பின்னர் கைக்குட்டை கொண்டு தனது கண்ணீரை துடைத்தபடி பேசினார்.

உருகிய கிரண்பேடி
பின்னர் உருக்கமாக பேசி வாக்குசேகரித்த அவர், "மக்களின் பேரன்பையும், ஆதரவையும் கண்டு என மனம் நெகிழ்ந்து போனது. இந்த அன்பை நிச்சயம் நான் உங்களுக்கு திருப்பி அளிப்பேன் என்றார்.

நேர்மையான ஆட்சி
உங்கள் மேலான அன்பை என்றைக்கும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வேன். டெல்லியில், நேர்மையுடன் ஆட்சி செலுத்துவேன்" என்றார்.

ஓட்டுக்காக கண்ணீரா?
இரும்புப் பெண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கிரண் பேடி பிரசாரத்தில் கண் கலங்கியது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம் ஓட்டுக்காக கிரண்பேடி கண் கலங்கினார் என்று எதிர்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications