ஒரே நாளில் உயரதிகாரிகள் 200 பேர் விடுமுறை: டெல்லி அரசுக்கு நெருக்கடி
டெல்லி: டெல்லியில் நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ள கார்களுக்கான ஒற்றை - இரட்டை இலக்க விதி செயல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்று 200-க்கும் மேற்பட்ட உயர் அதிகரிகள் ஒரே நாளில் விடுமுறை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம் என டெல்லி மாநில புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று டெல்லியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட உயர் அதிகரிகள் ஒரே நாளில் விடுமுறை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நேற்று 2 உயர் அதிகாரிகளை டெல்லி அரசு இடைநீக்கம் செய்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது. டேனிக்ஸ் சங்க உறுப்பினர்களான சிறப்பு செயலாளர்கள் சுபாஷ் சந்திர மற்றும் யஷ்பால் கர்க் ஆகியோர் டெல்லி அரசு ஆவணங்களில் கையெழுத்திட மறுத்ததால் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, ஒற்றை- இரட்டை கார்கள் திட்டத்தை அமல்படுத்த உள்ள நிலையில் ஏன் ஒரே நாளில் உயரதிகாரிகள் மொத்தமாக விடுப்பு எடுக்க வேண்டும்.என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டெல்லியின் துணை ஆளுநருடன் டேனிக்ஸ் சங்கம் பேச்சு நடத்தியுள்ளது மூலம் அவர்களின் கூட்டு சதி வெளிபட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக டெல்லி அரசுக்கும் ஆளுநர் நஜீப் ஜங் மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications