மாட்டிக்கினாரு ஒருத்தரு..நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! அவர் தான் பொறுப்பு..வெளியான பரபர தகவல்
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது ஒரு அறையில் இருந்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதை அடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில் அவரது இல்லத்தில் அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது உண்மை என அந்த குழு சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஸ்வந்த் வர்மா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மார்ச் மாதம் 14அம் தேதி அன்று இரவு ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அவரது வீட்டில் இருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யஸ்வந்த் வர்மா பண்டிகைக்காக வெளியூர் சென்ற நிலையில் அருகில் இருந்தோர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது யஸ்வந்த் வர்மாவின் வீட்டின் மற்றொரு அறையில் கட்டுக் கட்டாக பணம், நகைகள் ஆகியவை இருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்த நிலையில் மேலும் சில பணக் கட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பணக் கட்டுகள், மற்றும் மீதமிருந்த பணக் கட்டுகள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த தகவல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொலிஜியம் ஆலோசனை நடத்திய நிலையில் யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை குழு ஒன்றை அமைத்தது. அதில் நீதிபதிகள் ஷிக் நாகு, ஜிஎஸ் சந்தவாலியா, அனு சிவராமன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு தனது விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே யஸ்வந்த் வர்மா தாமாக முன்வந்து பதவி விலக மறுத்தார். இதற்கிடையே தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த 13ஆம் தேதி விசாரணை குழு அறிக்கையை குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த விசாரணை அறிக்கை பொதுவெளியில் கசிந்திருக்கிறது.
அந்த அறிக்கையில், நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் அஜாக்கிரதையாக செயல்பட்டு இருக்கிறார்கள். பிரச்சினையின் தீவிரம் மற்றும் நீதிபதி அப்போது வீட்டில் இல்லாதது போன்ற காரணங்களை காட்டி உயர் அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்பட்டு இருக்கிறார்கள். வீட்டின் சேமிப்பு அறையில் தான் தீ விபத்து ஏற்பட்டு பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த அறை நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
அங்கு இருந்த பொருட்களுக்கு நீதிபதியும் அவர்களது குடும்பத்தினரும் தான் பொறுப்பு. அந்த பணம் குறைந்த தொகையும் கிடையாது. நீதிபதி அல்லது அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு பணம் வந்திருக்காது. தான் சதிதிட்டத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன் என்ற அவரது கருத்தையும் ஏற்க முடியாது. இது சதி என்றால் ஏன் தனது ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொண்டார். மேலும் இது தொடர்பாக ஏன் புகார் அளிக்கவில்லை. நீதிபதி வர்மாவின் நம்பிக்கைக்குரிய ஊழியர்களால் பணம் 15 ஆம் தேதி அதிகாலையில் அகற்றப்பட்டது என்பதை வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன" எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் நீதிபதி வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications