ஜேஎன்யூ விவகாரம்: கன்னையா குமார் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!
டெல்லி: டெல்லி ஜேஎன்யூ மாணவரான கன்னையா குமார் தேச விரோத வழக்கில் கைதான நிலையில் அவருடைய ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் கன்னையாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பிரதீபா ராணி முன் நேற்று நடைபெற்றது. அப்போது, கன்னையா குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், "மாணவர் கன்னையா குமார் தேச விரோத கோஷங்களை எழுப்பவில்லை. முகமூடி அணிந்திருந்த சில நபர்கள் தான் அந்த கோஷங்களை எழுப்பியுள்ளனர். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் கன்னையாவுக்கு தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா , "பயங்கரவாதி அப்சல் குரு படத்தை ஏந்தி கன்னையா குமார் தேச விரோத கோஷங்களை எழுப்பியதை சாட்சிகள் மூலம் உறுதி செய்துள்ளோம். உளவுத்துறை, டெல்லி காவல்துறை விசாரணையிலும், கன்னையா குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது" என்று தெரிவித்துள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கன்னையா குமார் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications