டெல்லியில் மூன்றரை வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மூன்றரை வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதிசெய்துள்ளது.
டெல்லி: டெல்லியில் மூன்றரை வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி டெல்லி கிழக்குப் பகுதியில் ஒரு மூன்றரை வயது சிறுவனின் தந்தை வீட்டுக்கு வந்தபோது வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.பின்னர் குழந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் விஹார் காவல் நிலையத்தில் குழந்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் குழந்தையைத் தேடிய போலீஸார் விசாரணையில், அந்த வழியே வந்த ஒரு நபர் குழந்தையை மாடிக்கு தூக்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலிருந்த ஜெராக்ஸ் கடைக்காரர் இதை போலீசிடம் தெரிவித்துள்ளார . இந்த தகவலைத் தொடர்ந்து, குழந்தையைத் தேடி மாடிக்குச் சென்று அறையத் திறந்த போலீஸாருக்கு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கே வினோத் சோரென் என்ற நபர் அந்த மூன்றரை வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்துகொண்டிருந்தார். குழந்தை வலியில் கதறிக்கொண்டிருந்துள்ளான். குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வினோத் சோரெனை போலீஸார் கைது செய்தனர்.
இவர் மீதான வழக்கில், வழக்குப் பதிவு செய்து டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் வினோத் சோரெனுக்கு ரூ.41,000 அபராதமும் ஆயுள் தண்டனையும் வழங்கியது நீதி மன்றம். அதோடு, குழந்தைக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, குற்றவாளி சோரென் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்றும் குழந்தையை அடையாளம் தெரியாத சிலர் கொண்டுவந்து போட்டுவிட்டு தன்னை தாக்கிவிட்டு சென்றதாகவும் தன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாகவும் கூறினார்.
இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் அமர்வு விசாரித்தனர். விசாரனையில், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் சரியான தீர்ப்பையே வழங்கியுள்ளது. மூன்றரை வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபருக்கு இது பொருத்தமான தண்டனை என்று கூறி வழக்கை ரத்து செய்தனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications